இந்திய இராணுவத்திற்கு 800 இலகுரக ஆர்மர் வாகனங்கள்

  • Tamil Defense
  • July 3, 2022
  • Comments Off on இந்திய இராணுவத்திற்கு 800 இலகுரக ஆர்மர் வாகனங்கள்

இந்திய இராணுவத்திற்கு 800 இலகுரக கவச வாகனங்கள் வாங்கப்பட உள்ளன.இராணுவ வீரர்களின் கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிகளுக்காக இந்த 800 வாகனங்கள் வாங்கப்பட உள்ளன.

இதற்கான Request for Information (RFI) தற்போது இராணுவம் வெளியிட்டுள்ளது.எளிதில் மாற்றத்தக்க வடிவம் கொண்டதாக இந்த வாகனம் அமைய வேண்டும் என இராணுவம் வேண்டியுள்ளது.

பனி பிரதேசம், பாலைவனம் மற்றும் மலைப் பிரதேசம் என அனைத்திலும் இயங்கத்தக்கதாக இந்த வாகனம் இருக்க வேண்டும் என இராணுவம் கூறியுள்ளது.மேலும் Battle Field Surveillance Radar (BFSR), Hand Held Thermal Imager (HHTI) ஆகியவை மற்றும் இயந்திர துப்பாக்கி பொருத்தும் அளவிற்கு வாகனம் இருத்தல் வேண்டும் எனவும் இராணுவம் கூறியுள்ளது.