பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தால் ஒரு வருடத்தில் காலி

  • Tamil Defense
  • July 4, 2022
  • Comments Off on பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தால் ஒரு வருடத்தில் காலி

காஷ்மீரீல் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தால் ஒரே வருடத்திற்குள் வீழ்த்தப்படுவதற்கான வாய்ப்பு 64% ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதாவது பயங்கரவாத இயக்கத்தில் இணையும் 64% பேர் இயக்கத்தில் இணைந்த ஒரே வருடத்தில் பாதுகாப்பு படையால் வீழ்த்தப்படுவர்.

தனது வலுவான உளவு அமைப்புகள் மூலம் பாதுகாப்பு படைகள் பயங்கரவாதத்திற்கு எதிரான தங்களது பிடியை இறுக்கியுள்ளன.

மேலும் பயங்கரவாத இயக்கத்தில் இணையும் 28% பயங்கரவாதிகள் முதல் மாதத்திலேயே வீழ்த்தப்படுகின்றனர்.54% பேர் முதல் ஆறு மாதத்திற்குள்ளும் 59% பேர் முதல் ஒன்பது மாதத்திற்குள்ளும் வீழ்த்தப்படுகின்றனர்.

இந்த வருட முதல் ஐந்து மாதத்தில் மட்டும் 70 முதல் 75 பேர் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளனர்.தெற்கு காஷ்மீரில் தான் அதிகமான இளைஞர்கள் பயங்கரவாத பாதையை தேர்ந்தெடுக்கின்றனர்.இந்த வருடத்தில் மட்டும் 59 பயங்கரவாதிகள் தெற்கு காஷ்மீரில் வீழ்த்தப்பட்டுள்ளனர்.மத்திய மற்றும் வடக்கு காஷ்மீரில் 31 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.