அக்னிபாத் திட்டம் வழியாக கடற்படையில் இணைய 10000 பெண்கள் விண்ணப்பம்

  • Tamil Defense
  • July 6, 2022
  • Comments Off on அக்னிபாத் திட்டம் வழியாக கடற்படையில் இணைய 10000 பெண்கள் விண்ணப்பம்

அக்னிபாத் திட்டம் வழியாக இந்திய கடற்படையில் இணைய 10000 பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஜீலை 15 முதல் 30 வரை இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு படைக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

2022ல் 3000 பேர் அக்னிபாத் திட்டத்தின் மூலம் கடற்படையில் இணைக்கப்பட உள்ளனர்.இதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஐஎன்எஸ் சில்கா தளத்தில் தயார் செய்யப்பட்டுகின்றன.இங்கு பெண்கள் உட்பட தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படும்.

இதற்கு முன் இராணுவம் பெண்களை அதிகாரிகளாக மட்டுமே இராணுவத்தில் இணைத்தது.அதன் பிறகு 2019-20ல் இராணுவத்தின் அனைத்து பிரிவுகளிலும் பெண்களை இணைக்கத் தொடங்கியது.தற்போது இராணுவம் 46000 வீரர்களை அக்னிபாத் திட்டம் மூலமாக படையில் இணைக்க இராணுவம் திட்டமிட்டுள்ளது.

இவற்றில் 25 சதவீத வீரர்கள் நான்கு வருட சேவைக்கு பிறகு நேரடியாக படைக்கு தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.