நம்மிடமும் ஹைபர்சோனிக் ஆயுதம் – பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் சிஇஓ புதிய தகவல்

  • Tamil Defense
  • June 13, 2022
  • Comments Off on நம்மிடமும் ஹைபர்சோனிக் ஆயுதம் – பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் சிஇஓ புதிய தகவல்

இந்திய-இரஷ்யா இணைந்து உருவாக்கிய நிறுவனம் தான் இந்த Brahmos aerospace நிறுவனம் ஆகும்.இந்த நிறுவனத்தின் CEO தற்போது புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.இந்தியாவால் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரிக்க முடியும் எனவும் இன்னும் ஐந்து முதல் ஆறு வருடத்தில் இந்தியாவிடம் ஹைப்பர்சோனிக் ஏவுகணை இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

உலகின் அதிவேக மற்றும் மிகத்துல்லிய சூப்பர் சோனிக் ஆயுதம் நமது பிரம்மோஸ் ஆகும்.பிரம்மாஸ் தயாரிப்பின் வெள்ளி விழாவின் போது பேசிய பிரம்மோஸ் சிஇஓ அதுல் ரானே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் அடுத்த தலைமுறை பிரம்மோஸ் ஏவுகணை மேம்பாடு சிறப்பாங நடைபெற்று வருவதாகவும் ( Brahmos-NG) அடுத்த மூன்று முதல் ஐந்து வருடங்களில் தயாராகும் என அவர் கூறியுள்ளார்.

தற்போது பிரம்மோஸ் ஏவுகணை முப்படைகளிலுமே செயல்பாட்டில் உள்ளது.மேலும் இவற்றை நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இந்தியா தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் அடுத்த முயற்சியாக இந்தியா பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு கடற்கரை சார் கப்பல் எதிர்ப்பு பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.