ஆகாஸ் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க உள்ளதா வியட்நாம் ?

  • Tamil Defense
  • June 8, 2022
  • Comments Off on ஆகாஸ் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க உள்ளதா வியட்நாம் ?

இந்தியாவினுடைய பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்கள் வியட்நாட் செல்ல உள்ளார்.இந்த பயணத்தின் போது அவர் இந்திய தயாரிப்பு தளவாடங்கள் பலவற்றை வியட்நாமிற்கு அளிக்க இந்தியா தயாராக உள்ளதை அறிவிப்பார்.

அந்த வரிசையில் தற்போது வியட்நாம் அடுத்த தலைமுறை Akash NG ஏவுகணை அமைப்பு பெறுவதில் ஆர்வமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.70-80கிமீ வரை வானில் வரும் இலக்குகளை சுட்டுவீழ்த்தும் தன்மை கொண்டது இந்த ஆகாஸ் வான் பாதுகாப்பு அமைப்பு.

ஆகாஸ்-NG அமைப்பு முதலில் 2021ல் முதல் முறையான சோதனை செய்யப்பட்டது.அதன் பிறகு மூன்று முறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

2023 வாக்கில் ஆகாஸ்-NG வான் பாதுகாப்பு அமைப்பு தொடர் தயாரிப்புக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியா ஏற்றுமதிக்கு தயாராகும் பட்சத்தில் இந்த வான் பாதுகாப்பு அமைப்பை பெறும் முதல் நாடாக வியட்நாம் இருக்கும்.