நடுவானில் எரிபொருள் நிரப்பி உதவி செய்த UAE விமானப்படை- நன்றி தெரிவித்த IAF

எகிப்து நாட்டுடன் விமானப்பயிற்சி மேற்கொள்ள இந்திய விமானப்படையின் சுகாய் விமானங்கள் எகிப்து பறந்தன.அவ்வாறு செல்லும் வழியில் ஆறு மணி நேர இடைவிடாத பயணத்தின் போது ஐக்கிய அரபு அமீரக நாட்டின் விமானப்படை விமானம் நமது சுகாய் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பியது.இதற்கு இந்திய விமானப்படையும் தனது நன்றியினை தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக நாட்டின் MRTT விமானங்கள் சுகாய் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பி உதவியுள்ளன.

மேலும் விமானப்படை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இரு அருமையான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.அந்த புகைப்படத்தல் அரபு அமீரக விமானப்படையின் MRTT விமானம் இரு சுகாய் விமானங்களுக்கும் வானிலேயே எரிபொருள் நிரப்புவதை காண முடிந்தது.

நண்பர்களே நமது பதிவுகளை படித்து விட்டு அதிகமாக பகிருங்கள்.மேலும் உங்களது நண்பர்களிடமும் நமது பக்கத்தை பற்றிக் கூறுங்கள்.