1 min read
இந்திய இராணுவத்திற்கு புதிய ரேடார்கள் ஆர்டர்
இந்திய இராணுவத்திற்கு ஆறு புதிய ரேடார்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.ஆறு ஸ்வாதி மார்க் 2 Weapon Locating Radar ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
இந்த ரேடார்களை பாரத் டைனமிக் நிறுவனம் தயாரித்து இந்திய இராணுவத்திற்கு வழங்கும்.400 கோடிகள் ரூபாய் செலவில் இந்த ரேடார்கள் வாங்கப்பட உள்ளன.
இந்த மார்க் 2 ரேடார்கள் முந்தைய ஸ்வாதி ரேடாரின் அப்கிரேடு வகை ஆகும்.அதாவது மலைசார்ந்த பிரதேசங்களில் இயங்கும் வண்ணம் இந்த ரேடார்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் மலைசார்ந்த இடங்களில் இந்த ரேடார் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே இந்த ரேடாரை இந்திய இராணுவம் ஆர்டர் செய்துள்ளது.