பாக் பயங்கரவாதிகள் உட்பட ஏழு பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

  • Tamil Defense
  • June 20, 2022
  • Comments Off on பாக் பயங்கரவாதிகள் உட்பட ஏழு பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

நேற்று இரவு நடைபெற்ற என்கௌன்டர்களில் ஏழு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.இதில் மூன்று பாக் பயங்கரவாதிகளும் அடக்கம்.

குப்வாராவில் நேற்று இரவு என்கௌன்டர் தொடங்கியது.லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த இரு பாக் பயங்கரவாதிகள் நேற்று இரவு வீழ்த்தப்பட்டனர்.

இன்று காலை நடைபெற்ற என்கௌன்டரில் ஒரு பாக் பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான்.இவனுடன் ஒரு உள்ளூர் பயங்கரவாதியும் வீழ்த்தப்பட்டான்.

புல்வாமாவில் ஒரு லஷ்கர் பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்.அதன் பிறகு குல்கமில் ஒரு ஜெய்ஸ் பயங்கரவாதி மற்றும் ஒரு லஷ்கர் பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்.

மொத்தமாக மூன்று பாக் பயங்கரவாதிகள் உட்பட ஏழு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.