
பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பில் பயிற்சி பெறுவதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டு வீரர்கள் இந்தியா வர உள்ளனர்.கரையோர கப்பல் எதிர்ப்பு பட்டாலியனை சேர்ந்த பிலிப்பைன்ஸ் வீரர்கள் இதற்காக இந்தியா வர உள்ளனர்.
பிரம்மோஸ் அமைப்பு ஆபரேசன், மற்றும் பராமரிப்பு குறித்த பயிற்சிகள் இவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.பிலிப்பைன்ஸ் PMC தலையையகத்தில் கமாண்டன்ட் ஹெரிகோ என்பவர் தலைமையில் இந்த வழியனுப்பு விழா நடைபெற்றது.
இந்த குழுவிற்கு லெப் கலோ மிகல் பெரேஸ் என்பவர் தலைமை தாங்குவார்.பிலிப்பைன்ஸ் இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு வாங்கியுள்ளது.
கரையோர பாதுகாப்பு வகை பிரம்மோஸ் அமைப்பை தான் பிரம்மோஸ் வாங்கியுள்ளது.இது சீன அச்சுறுத்தலுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பலம் தரும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.