7வது நீலகிரி ரக ஸ்டீல்த் பிரைகேட் கப்பல் தயாரிப்பு ஆரம்பம்
புரோஜெக்ட் பி17ஏ திட்டத்தின் கீழ் இந்தியா நீலரிகி ரக பிரைகேட் கப்பல்களை கட்டி வருகிறது.இந்த கப்பல்களின் வரிசையில் ஏழாவது கப்பலுக்காக ஆரம்ப பணிகள்
(Y- 12654) ஜீன் 28 அன்று தொடங்கப்பட்டது.
ரியர் அட்மிரல் ஹரிஸ் அவர்கள் இந்த விழாவை தொடங்கி வைத்தார்.மசகான் கப்பல் கட்டும் தளத்தில் இந்த கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்திய கடற்படை மற்றும் மசகான் கப்பல் கட்டும் தளத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.
நீலகிரி ரக பிரைகேட் கப்பல்கள் மொத்தம் ஏழு கட்டப்பட்டு வருகிறது.இதில் நான்கு கப்பல்களை மசகான் நிறுவனமும் மூன்று கப்பல்களை கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளமும் கட்டுகிறது.
இந்தியத் தயாரிப்பு ஸ்டீல்கள் மற்றும் இந்தியா மேம்படுத்திய ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் கொண்டு இந்த கப்பல்கள் கட்டப்பட்டு வருகிறது.கப்பல்கள் படையில் இணையும் பட்சத்தில் கடற்படையின் பலம் உயரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.