
இந்திய கடற்படை தனது விமானம் தாங்கி கப்பலில் இருந்து இயக்குதவற்காக புதிய விமானத்தை தேடி வருகிறது.இதற்கு F/A-18E/F Super Hornet விமானம் சிறந்த தேர்வாக அமையும் என அமெரிக்க நிறுவனமான Boeing நிறுவனம் கூறியுள்ளது.
இந்திய கடற்படைக்கு எத்தனை விமானங்கள் தேவை என்ற தகவல் இல்லை ஆனால் முந்தைய தகவல் படி 57 விமானங்கள் வரை பெறப்படலாம்.ஆனால் இந்திய கடற்படைக்காக இந்தியா சொந்தமாகவே TEDBF ரக விமானத்தை மேம்படுத்தி வரும் நிலையில் புதிய விமானங்கள் வாங்கப்படும் எண்ணிக்கையில் மாற்றங்கள் இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்திய கடற்படையும் கோவாவில் சூப்பர் ஹார்னெட் விமானத்தை சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.
இது தவிர இந்திய இராணுவத்திற்காக மேலும் ஆறு அப்பாச்சி வானூர்திகள் வாங்கப்பட உள்ளன.இந்த வானூர்திகளின் பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இவை தவில மேலதிக பி-8ஐ, சின்னூக், அப்பாச்சி,KC-46 டேங்கர் விமானம் ஆகியவற்றையும் இந்தியாவிற்கு வழங்க தயாராக உள்ளதாக போயிங் நிறுவனமும் கூறியுள்ளது.