வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிடுகிறதா இராணுவமா ?

  • Tamil Defense
  • June 26, 2022
  • Comments Off on வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிடுகிறதா இராணுவமா ?

பாதுகாப்பு படைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் வண்ணம் தற்போது அக்னிபாத் என்னும் திட்டத்தை இந்திய அரசு முன்னெடுத்து வருகிறது.இதன் நோக்கம் சிறிய ஆனால் வலிமைமிகு படையை உருவாக்குவது என கூறப்படுகிறது.இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டங்களும் நடைபெறுவதை நாம் அறிவோம்.

அக்னிபாத் திட்டத்தின் நேரடி நோக்கம் குறித்து தெளிவாக அறியப்படவில்லை எனினும் ஓய்வூதியம் மற்றும் சம்பளங்களை குறைத்து அதன் மூலம் கிடைக்கும் தொகையை இராணுவ தளவாடங்கள் வாங்க பயன்படுத்தலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும் இதன் நீண்ட காலத் திட்டம் 13லட்சம் கொண்ட இராணுவத்தின் பலனை 11 லட்சமாக குறைத்து , சிறிய அளவிலான பலமான படையை ஏற்படுத்துவதாகும் என கூறப்படுகிறது.அடுத்த பத்தாண்டுகளில் படிப்படியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

அதாவது 10-15 ஆண்டுகளில் இராணுவத்தின் பலம் 10-10.5 லட்சம் வீரர்கள் என்ற அளவில் இருக்கும்.