அடுத்த தலைமுறை கார்வெட் கப்பல்கள் தயாரிக்க அனுமதிக்காக காத்திருக்கும் இந்திய கடற்படை

  • Tamil Defense
  • June 6, 2022
  • Comments Off on அடுத்த தலைமுறை கார்வெட் கப்பல்கள் தயாரிக்க அனுமதிக்காக காத்திருக்கும் இந்திய கடற்படை

36000 கோடிகள் செலவில் எட்டு கார்வெட் ரக கப்பல்கள் கட்டுவதற்கான அனுமதி பெற இந்திய கடற்படை காத்திருக்கிறது.இராஜ்நாத் சிங் அவர்கள் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் அமைப்பு இதற்கான அனுமதியை விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிலேயே இந்த கார்வெட் ரக கபபல்கள் தயாரிக்கப்படும்.இதன் எடை 1500 முதல் 2000 டன்கள் வரை இருக்கும்.

பெரிய முக்கியமான போர்க்கப்பல்களுக்கு இந்த கார்வெட் கப்பல்களின் துணை இன்றியமையாதது ஆகும்.

இந்த போர்க்கப்பல்கள் இந்திய கப்பல் கட்டும் தளம் ஒன்றில் கட்டப்படும்.இந்த கப்பல்கள் கட்டி முடிக்க 5-7 வருடங்கள் வரை ஆகும்.

பிரைகேட் ரக கப்பல்களை விட சிறிய கப்பல்களான இந்த கார்வெட் கப்பல்கள் ஒரு நவீன கடற்படைக்கு மிகவும் இன்றியமையாதது ஆகும்.