வான் பாதுகாப்பு ஏவுகணை சோதனை செய்த இந்திய கடற்படை

  • Tamil Defense
  • June 25, 2022
  • Comments Off on வான் பாதுகாப்பு ஏவுகணை சோதனை செய்த இந்திய கடற்படை

இந்திய கடற்படை செங்குத்தாக ஏவப்படும் வான் பாதுகாப்பு ஏவுகணை ஒன்றை இந்திய கடற்படையின் போர்க்கப்பலில் இருந்து வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.

மாக் 4.5 வேகம் செல்லக்கூடிய 60கிமீ தொலைவு வரை சென்று தாக்கக்கூடிய Vertical Launch Short Range Surface to Air Missile (VL-SRSAM) ஒடிசாவின் சந்திப்பூர் கடற்கரையோரம் சோதனை செய்துள்ளது.இந்தியா சொந்தமாக மேம்படுத்தியுள்ள அஸ்திரா வான்-வான் ஏவுகணை அடிப்படையாக கொண்டு இந்த ஏவுகணை மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா இதே போன்ற பாரக் 8 ஏவுகணை மேம்படுத்தி பெரிய போர்க்கப்பல்களில் இணைத்துள்ளது.இந்த புதிய ஏவுகணை சிறிய ரக போர்க்கப்பல்களில் இணைத்து பயன்படுத்தப்படும்.

கடற்பரப்பை ஒட்டி வரும் இலக்குகள் உள்ளிட்டு குறை தூரத்தில் வரும் பல எதிரி இலக்குகளை தாக்கியழிக்க வல்லது இந்த புதிய ஏவுகணை.

இந்த ஏவுகணை சோதனையை டிஆர்டிஓ மற்றும் இந்திய கடற்படையை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் கண்காணித்தனர்.

இந்த வெற்றிகரமாக சோதனைக்கு கடற்படை தளபதி தனது வாழ்த்துக்களை பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.