இந்தோனேசியா செல்லும் கடற்படை தளபதி- புதிய தளவாடங்கள் வாங்க உள்ளதா இந்தோனேசியா ?
இந்த வருடத்தில் இந்திய கடற்படை தளபதி இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குவாட் நாடுகள் எனப்படும் இந்தியா , அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஆசியன் நாடுகளுடன் மிக நெருங்கிய உறவை பேண முயற்சித்து வருகின்றன.இதன் பகுதியாக தான் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமாரின் இந்த இரு நாட்டு பயணங்கள் அமைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கான தேதிகள் குறித்து முடிவெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பயணத்தில் சீனா குறித்த பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் பெறும் கூறப்படுகிறது.இந்திய கடற்படை தளபதி தற்போது தான் மாலத்தீவு மற்றும் சீசெல்ஸ் நாடுகளுக்கு பயணமானது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு நாடுகளும் இந்தியாவிற்கு மிக முக்கியமானதாகும்.அதிலும் பிலின்பைன்ஸ் தற்போது தான் இந்தியாவிடம் இருந்து பிரம்மாஸ் ஏவுகணைகளை வாங்கியுள்ளது.மேலும் இது இந்தியா-பிலிப்பைன்ஸ் உறவின் தொடக்கம் தான் என பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.