
அக்னிபாத் திட்டம் தொடர்பாக தற்போது நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் அக்னிபாத் திட்டம் குறித்தும் அதன் பலன்கள் குறித்தும் தற்போது கடற்படை தளபதி விளக்கம் கொடுத்துள்ளார்.
நிறைய இளைஞர்களை இராணுவத்திற்கு கொண்டு வரும் நோக்கோடும் நான்கு வருடங்களுக்கு பிறகு அந்த குறிப்பிட்ட இளைஞரின் வாழ்க்கை மாற்றம் குறித்து கடற்படை தளபதி பேசியுள்ளார்.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் ஆக படையில் இணையும் வீரருக்கு ஒரு போர்க்கப்பல்,நீர்மூழ்கி ஆகியவற்றை இயக்க கற்றுத் தரப்படுகிறது.நவீன தொழில்நுட்பங்களை கையாள கற்றுத் தரப்படுகிறது.நான்கு வருடத்தில் அவர் அனுபவிக்கும் கடினங்களால் அவரது தன்மை மாறுபடுகிறது.
தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.அதன் பிறகு அவர் படையிலம் இருக்க முடிவு செய்யலாம் அல்லது வேறு வேலைக்கும் செல்லலாம் என கடற்படை தளபதி கூறியுள்ளார்.
தற்போது 21 வயதில் இருந்து 23 ஆக இணையும் வயதை படைகள் உயர்த்தியுள்ளன.கோரானா காலத்தில் ஆள்சேர்ப்பு நடைபெறாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அக்னிவீர் திட்டம் குறித்த உங்கள் கருத்துக்களை பகிருங்கள் நண்பர்களே