இராணுவம்-விமானப்படை இணைந்து ஹிமாச்சலில் போர்பயிற்சி

  • Tamil Defense
  • June 16, 2022
  • Comments Off on இராணுவம்-விமானப்படை இணைந்து ஹிமாச்சலில் போர்பயிற்சி

ஹிமாச்சல பிரதேசத்தில் தற்போது நடைபெற்று வரும் பயிற்சியில் இந்திய விமானப்படை மற்றும் இந்திய இராணுவத்தின் சிறப்பு படைகள் இணைந்து நீரில் தரையிறங்கி பயிற்சி செய்தன.

ஹிமாச்சலில் உள்ள கோபிந்த் சாகர் ரிசர்வியரில் இந்த பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது.எதிரி நீர்நிலைகளில் இறங்கி ஆபரேசன் நடத்துதல் தொடர்பாக இந்த பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது.

இதே போல இந்த வருடம் மார்ச் 24 மற்றும் 25ல் சிலிகுரி காரிடரில் இந்திய இராணுவம் பயிற்சி நடத்தியது குறிப்பிடத்தக்கது.இது போல இந்திய இராணுவம் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறது.