பேச்சுவார்த்தை மூலம் எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு – சீன வெளியுறவுத் துறை

  • Tamil Defense
  • June 10, 2022
  • Comments Off on பேச்சுவார்த்தை மூலம் எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு – சீன வெளியுறவுத் துறை

பேச்சுவார்த்தை மற்றும் உரிய தகவல்பரிமாற்றம் மூலம் இந்திய-சீனா தனது எல்லைப் பிரச்சனையை தீர்க்க முடியும் என சீன வெளியுறவுத் துறை செய்தி வெளியிட்டுள்ளது.மேலும் அமெரிக்கா பிரச்சனையை மேலும் பெரிதுபடுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளது.

தற்போது அமெரிக்க இராணுவத்தின் பசிபிக் கமாண்டிங் ஜெனரல் சார்லஸ் பிலின் அவர்கள் நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்த பயணத்தை விமர்சித்து தான் சீனா தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு முன் மே 8 அன்று பிலின் அவர்கள் லடாக் பகுதியில் சீனாவின் இராணுவ கட்டமைப்பு குறித்து விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.இதனை அடுத்து பிராந்திய அமைதிக்கும் அமெரிக்கா குந்தகம் விளைவிப்பதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் எல்லையில் தற்போது நிலைமை சீராக உள்ளதாகவும் இரு நாட்டு வீரர்களும் எல்லையில் பல்வேறு பகுதிகளில் இருந்து பின்வாங்கியுள்ளதாகவும் அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்தியாவின் ஒருங்கிணைப்பு தன்மையை பாதுகாக்க இந்தியா தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக கூறியுள்ளது.

மேலும் எல்லையில் இந்தியாவும் தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் மேற்கொண்டு வருவதாகவும் இது இராணுவ மற்றும் பொருளாதாக முன்னேற்றம் என இரண்டுக்கும் தேவையானதாக இருக்கும் என இந்திய வெளியுறவுத் துறை கூறியுள்ளது.