300கிமீ சென்று தாக்கும் அஸ்திரா மார்க் 3 சோதனை

  • Tamil Defense
  • June 11, 2022
  • Comments Off on 300கிமீ சென்று தாக்கும் அஸ்திரா மார்க் 3 சோதனை

இந்தியா தற்போது இரண்டு வகை அஸ்திரா ஏவுகணையை மேம்படுத்தி வருகிறது.ஒன்று 160கிமீ வரை சென்று தாக்கும் ரகம் மற்றும் மற்றொன்று 300கிமீ வரை சென்று தாக்கும் ரகம் ஆகும்.

அஸ்திரா மார்க் 2 ஏவுகணை அடுத்த வருடம் சோதனை செய்யப்படும் வேளையில் 300 கிமீ வரை செல்லும் அஸ்திரா மார்க் 3 ஏவுகணை 2024ம் ஆண்டு சோதனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது
செயல்பாட்டில் உள்ள அஸ்திரா மார்க் 1 ஏவுகணை 100கிமீ வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.

சீனாவும் PL-15 க்ரூஸ் ஏவுகணையை மேம்படுத்தியுள்ளது.இது 200கிமீ வரை சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது.

இந்தியா தனது படைகளுக்காக அஸ்திரா மார்க்-1 ஏவுகணையை ஆர்டர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.2971 கோடிகள் செலவில் இந்த ஏவுகணைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.இவற்றை BDL நிறுவனம் தயாரித்து படைகளுக்கு வழங்கும்.