160கிமீ செல்லும் அஸ்திரா ஏவுகணை சோதனை

160கிமீ வரை செல்லும் அஸ்திரா மார்க் 2 BVR ஏவுகணை அடுத்த மாதம் சோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் AIM-120D AMRAAM ஏவுகணையின் ஒத்த திறனை இந்த அஸ்திரா மார்க் 2 ஏவுகணை கொண்டுள்ளது.இந்த புதிய அஸ்திரா ஏவுகணை இந்திய விமானப்படையில் உள்ள தேஜஸ் உட்பட அனைத்து போர்விமானங்களுடனும் இணைக்கப்பட உள்ளது.

இந்தியா தற்போது Rs 2,971 கோடிகள் செலவில் அஸ்திரா மார்க் 1 ஏவுகணை வாங்க உள்ளது.இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்காக இந்த ஏவுகணை வாங்கப்பட உள்ளது. இந்த ஏவுகணையை பாரத் டைனமிக் நிறுவனம் சப்ளை செய்யும்.

இதற்கு முன் இந்திய விமானப்படை பெரும்பாலும் இரஷ்ய ஏவுகணைகளையே சார்ந்திருந்தது.தற்போது இந்திய ஏவுகணை தயாரிக்கப்படுவது மகிழ்ச்சியே.

கிட்டத்தட்ட 200 ஏவுகணைகளை வரை வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இவை இந்திய விமானப்படையின் சுகோய் மற்றும் கடற்படையின் மிக்-29 விமானங்களுக்காக பெறப்பட உள்ளது.