வியட்நாமிற்கு ரோந்து கப்பல்களை ஏற்றுமதி செய்யும் இந்தியா

  • Tamil Defense
  • June 7, 2022
  • Comments Off on வியட்நாமிற்கு ரோந்து கப்பல்களை ஏற்றுமதி செய்யும் இந்தியா

இந்தியாவினுடைய பாதுகாப்பு துறை அமைச்சர் வரும் ஜீன் 8 அன்று வியட்நாமிற்கு பயணம் மேற்கொள்கிறார்.இந்த பயணத்தின் போது இந்தியா வழங்கிய 100 மில்லியன் பாதுகாப்பு கடன் வழியாக இந்தியாவின் L&T நிறுவனம் கட்டிய 12 அதிவேக ரோந்து கப்பல்கள் வியட்நாமிற்கு வழங்கப்பட உள்ளது.

அதன் பிறகு வியட்நாம் ஜெனரல் பான் வான் ஜியாங் அவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளார்.இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கு இடையே உள்ள பாதுகாப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இது தவிர இந்தியா வழங்கிய 5மில்லியன் டாலர்கள் வழியாக கட்டப்பட்ட வியட்நாமிய இராணுவ சாப்ட்வேர் பார்க் செல்ல உள்ளார் இராஜ்நாத் சிங் அவர்கள்.