மலேசியா தற்போது தனது விமானப்படைக்கு 18 இலகுலக காம்பட் விமானம் வாங்க உள்ளது.இதற்கு இந்தியா தனது தேஜஸ் விமானத்தை வழங்க தயாராக உள்ளது.மேலும் இத்துடன் மலேசிய நாட்டு சு-30 விமானங்களுக்கு உதிரிபாகங்கள் மற்றும் பராமரிப்பு தொடர்பான உதவிகளை வழங்கவும் இந்தியா தயாராக உள்ளது.
இந்தியாவின் ஹால் நிறுவனம் சுகாய் விமானங்கள் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் நிறைய அனுபவங்களை கொண்டிருப்பதால் மலேசியாவின் சுகாய் விமானங்களை தொடர்ந்து பறக்க வைப்பதில் உறுதுணையாக இருக்கும்.
தென் கொரியா மற்றும் சீனாவும் இந்த போட்டியில் உள்ளது எனினும் இந்தியா மட்டுமே சுகாய் விமானங்களை பராமரிப்பது தொடர்பான வாக்குறுதியை மலேசியாவிற்கு அளித்துள்ளது.
மலேசியா தற்போது 18 அல்லது 19 Su 30 MKM போர்விமானங்களை இயக்கி வருகிறது.இந்தியா Su-30 MKI விமானங்களை இயக்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
நவீன AESA ரேடார் மற்றும் நவீன ஏவியோனிக்ஸ் மற்றும் பலவித வான்-வான் ஏவுகணைகளை இணைக்க முடியும் ஆகிய உத்திரவாதத்துடன் இந்தயா மலேசியாவிற்கு தனது தேஜஸ் விமானத்தை அளிக்கு முன்வந்துள்ளது.