மேம்படுத்தப்பட்ட கெஸ்ட்ரால் கவச வாகனம் படையில் இணைப்பு

  • Tamil Defense
  • June 25, 2022
  • Comments Off on மேம்படுத்தப்பட்ட கெஸ்ட்ரால் கவச வாகனம் படையில் இணைப்பு

டாடா தயாரிப்பு மேம்படுத்தப்பட்ட டாடா கெஸ்ட்ரால் இன்பான்ட்ரி காம்பட் வாகனம் இந்திய இராணுவத்தில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தை மிக எளிதாக இயக்க முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இந்த வாகனத்தில் இருந்து 1800மீ தொலைவு வரை பார்க்க முடியும்.

இந்த வாகனத்தின் மேற்புறம் பொருத்தப்பட்டுள்ள ஆயுதங்களை வாகனத்தின் உட்புறம் இருந்தே இயக்க முடியும் என வடக்கு இராணுவ கட்டளையகத்தின் கமாண்டர் லெப் ஜென் உபேந்திர டிவிவேதி அவர்கள் கூறியுள்ளார்.