
ஜெர்மனியிடம் இருந்து முதல் தொகுதி Panzerhaubitze Pzh 2000 155mm ஹொவிட்சர்களை உக்ரேன் தற்போது பெற்றுள்ளது.
மேலும் ஜெர்மனி இந்த ஹொவிட்சரை இயக்குவதற்கான பயிற்சியை உக்ரேன் இராணுவ வீரர்களுக்கு ஏற்கனவே அளித்துள்ளது.
இரஷ்ய ஊடுருவலை தடுக்க உக்ரேன் ஜெர்மனியிடம் அதிநவீன ஆயுதங்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்டே இருந்ததை தொடர்ந்து தற்போது ஜெர்மனி அதிநவீன ஹொவிட்சர்களை அனுப்பி உள்ளது.
40கிமீ தூரம் வரை தாக்கும் இந்த ஹொவிட்சர்கள் ஜெர்மனியிடம் உள்ள அதிநவீன ஆயுதங்களுள் ஒன்றாகும்.