எகிப்து நாட்டிற்கு தேஜஸ் விமானங்களை விற்க திட்டம்

இந்தியா எகிப்து நாட்டிற்கு தனது தேஜஸ் விமானங்களை விற்க முன்வந்துள்ளது. 70 தேஜஸ் LCA-LIFT விமானங்களை இந்தியா எகிப்து நாட்டிற்கு விற்க முன்வந்துள்ளது.

எகிப்து தனது சீன தயாரிப்பு K-8E பயிற்சி விமானத்தை படையில் இருந்து நீக்கி அதற்கு பதிலாக புதிய விமானங்களை வாங்க உள்ளது.இந்த திட்டத்திற்கு தான் இந்தியா தற்போது தனது தேஜஸ் விமானங்களை அளிக்க முன்வந்துள்ளது.கிட்டத்தட்ட 70 தேஜஸ் lead-in fighter training (LIFT) விமானங்களை அளிக்க இந்தியா முன்வந்துள்ளது.

மேலும் இந்த விமானங்களை எகிப்து நாட்டிலேயே தயாரிக்க அங்கு தயாரிப்பு மையத்தை ஏற்படுத்தவும் இந்தியா முன்வந்துள்ளது.இவை தவிர தனது வானூர்திகளையும் வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

இந்தியா மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு வானூர்திகளை விற்க முன்வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதற்காக முக்கிய எகிப்து நாட்டு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது மேலும் எகிப்திய விமானப்படை தளபதி விரைவில் இந்தியா வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேஜஸ் தவிர இந்தியத் தயாரிப்பு த்ருவ் மற்றும் இலகுக தாக்கும் வானூர்திகள் ஆகியவற்றையும் வழங்க இந்தியா முன்வந்துள்ளது.