
இந்தியா சொந்தமாக மேம்படுத்தியுள்ள லேசர் வழிகாட்டு டேங்க் எதிர்ப்பு ஏவுகணையை டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.அர்ஜீன் டேங்கில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையானது இலக்கை மிகத்துல்லியமாக தாக்கியது.
சோதனையின் போது ஏவுகணை மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது மற்றும் அதன் அனைத்து உட்அமைப்புகளும் திருப்திகரமாக செயல்பட்டுள்ளது.ERA எனப்படும் Explosive Reactive Armour (வெடிப்பை தாங்கும் கவசம் ) பொறுத்தப்பட்ட டேங்கை தாக்க இந்த ஏவுகணையில் tandem High Explosive Anti-Tank (HEAT) வெடிபொருள் பயன்படுத்தப்படுகிறது.
பல்வேறு ஏவு அமைப்புகளில் இருந்து ஏவும் வண்ணம் இந்த ஏவுகணை மேம்படுத்தப்பட்டுள்ளது.தற்போது 120 mm சுடும் துப்பாக்கி கொண்ட அர்ஜீன் டேங்கில் இருந்து சோதனை செய்யப்பட்டுள்ளது.
குறைந்த மற்றும் அதிக தொலைவுக்கான சோதனைகளை தற்போது இந்த ஏவுகணை வெற்றிகரமாக முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.