மூன்றாவது விமானம் தாங்கி கப்பலை மின்னல் வேகத்தில் கட்டிய சீனா- முக்கிய தகவல்கள்

  • Tamil Defense
  • June 10, 2022
  • Comments Off on மூன்றாவது விமானம் தாங்கி கப்பலை மின்னல் வேகத்தில் கட்டிய சீனா- முக்கிய தகவல்கள்

சீனா டைப் 003 எனப்படும் தனது பெரிய மற்றும் நவீன விமானம் தாங்கி கப்பலை கடற்சோதனையில் ஈடுபடுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சோதனைக்கு பிறகு அடுத்த இரண்டு வருடங்களில் கப்பல் படையில் இணைக்கப்படும்.

கப்பல் தற்போது தளத்தில் ஏவப்படுவதற்கு தயாராக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மற்றும் கப்பலின் செயற்கைகோள் படங்களும் வெளியாகியுள்ளது.

தற்போது சீனாவிடம் இரு விமானம் தாங்கி கப்பல்கள் உள்ளன.லயோனிங் மற்றும் ஷான்டோங் என இரு விமானம் தாங்கி கப்பல்கள் சீனாவிடம் உள்ளன.

இந்தியாவும் சொந்தமாக கட்டிய விமானம் தாங்கி கப்பலை கட்டியுள்ளது.இந்த வருடம் விக்ராந்த் படையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.