மூன்றாவது விமானம் தாங்கி கப்பலை களமிறக்கிய சீனா

சீனா தனது மூன்றாவது விமானம் தாங்கி கப்பலை இன்று கடற்சோதனைக்கு களமிறக்கியுள்ளது.சீனா சொந்தமாக கட்டும் இரண்டாவது விமானம் தாங்கி கப்பல் இதுவாகும்.

டைப்003 ரக கப்பலான இதற்கு ” புஜியன் ” என சீனா பெயரிட்டுள்ளது.தைவானுக்கு அருகே உள்ள சீனாவின் தென்கிழக்கு மாகாணத்தின் பெயரை சீனா இந்த விமானம் தாங்கிகப்பலுக்கு வைத்துள்ளது.

இது சீனாவின் முதல் Catapult Assisted Take-off But Arrested Recovery (CATOBAR) ரக விமானம் தாங்கி கப்பல் ஆகும்.மிக நவீனமான இந்த கப்பலை சீனாவின் சாங்காயில் உள்ள ஜியாக்னன் கப்பல் கட்டும் தளம் கட்டியுள்ளது.

முழு எடையாக மொத்தம் 80000 டன்கள் எடையுடையது ஆகும்.இது அமெரிக்காவின் அணுசக்தி விமானம் தாங்கி கப்பலை ஒத்தது எனினும் சீனாவின் டைப்-003 கப்பல் கன்வென்சனல் ஆற்றலில் இயங்க கூடியது.

அமெரிக்காவின் Ford-class விமானம் தாங்கி கப்பல்களை போலவே இந்த சீனாவின் புதிய கப்பலும் Electromagnetic Aircraft Launch System (EMALS) தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.