இந்திய சீன எல்லையில் சீனாவின் இராணுவ கட்டுமானங்கள் ஆபத்தான முறையில் கட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவ அதிகாரி கூறியதை அடுத்து தற்போது சீனா கிழக்கு லடாக் பகுதியில் உள்ள தனது ஹோடன் விமான தளத்தில் 25 நவீன போர் விமானங்களை நிறுத்தியுள்ளது.
J-11 மற்றும் J-20 போர்விமானங்களை சீனா ஹோடன் விமானப்படை தளத்தில் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கு முன் பழைய விமானங்களை அங்கு நிறுத்தியிருந்தது.தற்போது நவீன விமானங்களை நிறுத்தியுள்ளது.
சீன விமானப்படை தற்போது எல்லைக்கு மிக அருகே புதிய விமான ஓடுதளங்களை கட்டி வருகிறது.சீனாவின் இந்த நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
ஹோடன் தவிர்த்து கர் குன்சா, கஷ்கர், ஹோப்பிங் ஆகிய சீனாவின் மிக முக்கிய தளங்களையும் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.