சீன போர் விமானம் விபத்து-முக்கிய தகவல்கள்

  • Tamil Defense
  • June 10, 2022
  • Comments Off on சீன போர் விமானம் விபத்து-முக்கிய தகவல்கள்

பயிற்சியின் போது சீன போர்விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மேலும் இருவர் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனாவின் போர்விமானங்கள் விபத்துக்குள்ளானால் பெரும்பாலும் வெளியில் தெரிவதில்லை.ஆனால் இந்த நிகழ்வு தற்போது வெளியே வந்துள்ளது.

சீனா விமானப்படையின் ஜே-7 விமானம் தான் விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் இருந்து விமானி பத்திரமாக தப்பியுள்ளார்.விபத்தில் குடியிருப்பு பகுதி கட்டிடங்கள் பல சேதமடைந்தன.

ஜே-7 விமானம் ஆக பழைய விமானம் ஆகும்.மிக்-21 விமானத்தை ஒட்டி இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.