பிரம்மோஸ் வாங்கியது தொடக்கமே- பிலிப்பைன்ஸ்
1 min read

பிரம்மோஸ் வாங்கியது தொடக்கமே- பிலிப்பைன்ஸ்

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வாங்கியது இரு நாடுகளின் கூட்டு பங்களிப்பின் தொடக்கமே என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வாங்கியது பார்ட்னர்சிப்பின் தொடக்கமே என பிலிப்பைன்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் அன்டோனியோ மொரால்ஸ் கூறியுள்ளார்.

375 மில்லியன் டாலர்கள் செலவில் இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகள் வாங்கும் திட்டத்தை அந்நாட்டு மக்கள் மற்றும் இராணுவம் வரவேற்பதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகள் மூலம் மேலதிக தளவாடங்கள் பெறப்படும் என அவர் கூறியுள்ளார்.