இந்திய இராணுவ தளவாடங்களை வாங்குகிறா ஆர்மீனியா ?

  • Tamil Defense
  • June 25, 2022
  • Comments Off on இந்திய இராணுவ தளவாடங்களை வாங்குகிறா ஆர்மீனியா ?

இந்தியாவிடம் உள்ள ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் குறித்து அறிய அர்மேனிய நாட்டு இராணுவ குழு இந்தியா வந்துள்ளது.

இந்தியா வந்த ஆர்மேனிய இராணுவ குழுவிற்கு இந்திய தனியார் நிறுவனங்கள் இந்திய பாதுகாப்பு படைகளுக்காக மேம்படுத்திய ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் குறித்து விவரிக்கப்பட்டது.

soft kill option மற்றும் ட்ரோனின் சிக்னலை ஜாம் செய்வது என இருவகை திறனும் கொண்ட ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கப்பட்டது.

இது தவிர இந்திய நிறுவனமான Tonbo Imaging நிறுவனம் தனது தயாரிப்புகள் குறித்து வந்திருந்த அதிகாரிகளுக்கு விளக்கியது.இந்நிறுவனம் electro-optics பொருள்கள் தயாரிப்பதில் சிறந்த நிறுவனமாகும்.மேலும் தற்போது மேம்பாட்டில் உள்ள ட்ரோன்கள் குறித்தும் விளக்கப்பட்டது.

மேலும் சில இந்திய தயாரிப்பு இராணுவ தளவாடங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.கடந்த வருடம் இந்தியா தனது ஸ்வாதி ரேடார்களை ஆர்மேனியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்தது குறிப்பிடத்தக்கது.