நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்பு கொண்ட காஷ்மீர் பிரிவினைவாதி !!

  • Tamil Defense
  • May 11, 2022
  • Comments Off on நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்பு கொண்ட காஷ்மீர் பிரிவினைவாதி !!

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னனி அமைப்பின் தலைவனான யாசின் மாலிக் தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நிதிமன்றத்தில் தனது குற்றங்களை ஒப்பு கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது தன் மீது சுமத்தப்பட்ட பிரிவினைவாத குற்றங்கள் மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்தது போன்ற குற்றங்கள் அனைத்தையும் தலைநகர் தில்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நிதிமன்றத்தில் ஒப்பு கொண்டுள்ளான்.

சட்டவிரோத செயல்கள் தடை சட்டம் UAPA – Unlawful Activities Prevention Act என்ற சட்டத்தின் பல பிரிவுகளில் யாசின் மாலிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

இவனை தவிர பிட்டா கராட்டே, ஷப்பீர் ஷா, மஸரத் ஆலம், யூசுஃப் ஷா, நயீம் கான், அக்பர் கான்டே, ராஜா மெஹரூதீன் கல்வால் மற்றும் மேலும் ஐவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

யாசின் மாலிக் மற்றும் பிட்டா கராட்டே எனப்படும் ஃபரூக் அஹமது தார் முதலியோர் காஷ்மீர் பண்டிட்டுகள் மீதான தாக்குதல் துவங்கி பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதல் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் என பல்வேறு பிரிவினை மற்றும் சமுக அமைதி சீர்கேடு குற்றங்களை புரிந்தவர்கள் ஆகும்.