உள்நாட்டு ஆயுதங்களுக்கு முக்கியத்துவம் தொடரும் புதிய தரைப்படை தளபதி !!

நாட்டின் 29ஆவது தரைப்படை தலைமை தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே பொறுப்பேற்று கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார்.

அப்போது அவர் உலகளாவிய புவிசார் அரசியல் சூழல் மிகவும் வேகமாக மாறி வருகிறது ஆகவே இந்திய தரைப்படையின் தயார்நிலை உறுதிபடுத்தப்படும் எனவும்,

நிகழ்கால மற்றும் எதிர்கால சூழல்களுடன் தொடர்புடைய அனைத்து சவால்களையும் முழுமையாக அணுகும் விதமாக தரைப்படையின் தயார்நிலை இருப்பதை உறுதிபடுத்த உள்ளதாகவும் அவர் பேசினார்.

மேலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் தளவாடங்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலமாக தன்னிறைவை பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்தார்.