பயிற்சியின் போது கரடியால் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர் !!

  • Tamil Defense
  • May 13, 2022
  • Comments Off on பயிற்சியின் போது கரடியால் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர் !!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள எல்மன்டார்ஃப் ரிச்சர்டஸன் அமெரிக்க கூட்டு ராணுவ தளத்தில் அமெரிக்க தரைப்படையின் பாராசூட் படையினர் நிலைநிறுத்தப்பட்டு இருந்தனர்.

இந்த வீரர்களின் ஒரு சிறு குழு அடர்ந்த காட்டு பகுதியில் போர் பயிற்சி ஒன்றில் ஈடுபட்டு இருந்த போது கரடி ஒன்று ஒரு வீரரை மிகவும் கொடுரமாக தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் உயிரிழந்தார்.

இதனையடுத்து அலாஸ்கா மாகாண வனத்துறை வீரர்கள் கரடியை பிடிக்க விரைந்துள்ளனர்.