அமெரிக்க ஏவுகணைகளை படையில் இருந்து விலக்கும் இங்கிலாந்து !!

  • Tamil Defense
  • May 10, 2022
  • Comments Off on அமெரிக்க ஏவுகணைகளை படையில் இருந்து விலக்கும் இங்கிலாந்து !!

இங்கிலாந்து கடற்படை தான் பயன்படுத்தி வரும் அமெரிக்காவின் McDonnell Douglas மற்றும் Boeing Defense space Security ஆகிய நிறுவனங்கள் கூட்டாக தயாரித்த AGM-84 HARPOON கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது.

தற்போது இந்த AGM-84 HARPOON ரக கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை இங்கிலாந்து கடற்படை தனது பயன்பாட்டில் இருந்து விலக்கி கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக Type-45 என்றும் D அல்லது Daring ரகம் எனவும் அறியப்படும் இங்கிலாந்து கடற்படையின் முன்னனி நாசகாரி போர் கப்பல்களில் இருந்து தான் மேற்குறிப்பிட்ட AGM-84 HARPOON ஏவுகணைகளை முதலில் அகற்ற திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.