ஃபிரான்ஸில் நடுவானில் மோதி கொண்ட ரஃபேல் போர் விமானங்கள் !!

  • Tamil Defense
  • May 24, 2022
  • Comments Off on ஃபிரான்ஸில் நடுவானில் மோதி கொண்ட ரஃபேல் போர் விமானங்கள் !!

ஃபிரான்ஸ் நாட்டின் சாட்டிர்பெர்னார்ட் விமானப்படை தளத்தில் உலக பிரசத்தி பெற்ற காக்னாக் (Cognac) விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இதில் ஃபிரெஞ்சு விமானப்படையின் Vautour Bravo சாகச குழுவை சேரந்த இரண்டு ரஃபேல் விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன.

அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு விமானங்களும் நடுவானில் மோதி கொண்டன அப்போது இரண்டு விமானங்களின் சிறிய இறகுகள் மட்டுமே சேதமடைந்தன.

அதிர்ஷ்டவசமாக விமானிகள் பார்வையாளர்கள் என யாருக்கும் ஒரு காயமும் ஏற்படவில்லை அதை போல விமானங்களும் பத்திரமாக தரை இறங்கின தற்போது விபத்து குறித்து விசாரணை நடத்த ஃபிரெஞ்சு விமானப்படை உத்தரவிட்டுள்ளது.