பஞ்சாபில் இரு பாக் உளவாளிகள் To

பஞ்சாபின் அம்ரிஸ்டரில் பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ-க்கு வேலை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொல்கத்தாவை சேர்ந்த ஜாபர் ரியாஸ் மற்றும் பீகாரை சேர்ந்த முகமது ஷாம்சத் என்ற இருவரை கைது செய்துள்ளன பாதுகாப்பு படைகள்.

அம்ரிஸ்டரில் உள்ள இராணுவ கன்டோன்மென்ட் மற்றும் விமான படைத் தளம் ஆகியவற்றின் புகைப்படங்கள் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.