Breaking News

நாளை கடலில் இறக்கப்படும் இரண்டு புதிய போர் கப்பல்கள் !!

  • Tamil Defense
  • May 16, 2022
  • Comments Off on நாளை கடலில் இறக்கப்படும் இரண்டு புதிய போர் கப்பல்கள் !!

மும்பை நகரில் அமைந்துள்ள மஸகான் கப்பல் கட்டுமான தளம் ஸ்கார்பீன் நீர்மூழ்கி, விசாகப்பட்டினம் நாசகாரி மற்றும் நீலகிரி ஃப்ரிகேட் என நாட்டின் மூன்று முன்னனி ரகங்களை சேர்ந்த போர் கப்பல்களை கட்டி வந்தது.

இதில் கடைசி ஸ்கார்பீன் சமீபத்தில் படையில் இணைக்கப்பட்ட நிலையில், நாளை விசாகப்பட்டினம் ரக கப்பல் ஒன்றும் நீலகிரி ரக கப்பல் ஒன்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் விழாவில் கடலில் இறக்கப்பட உள்ளன.

விசாகப்பட்டினம் ரக நாசகாரி போர் கப்பல்களில் கடைசியும் நான்காவதுமான INS SURAT ஐ.என்.எஸ். சூரத் நாளை கடலை தொட உள்ளது, ஏற்கனவே ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் படையில் இணைந்த நிலையில் இந்த வருடம் ஐ.என்.எஸ். இம்பால் படையில் இணைய உள்ளது அடுத்த ஆண்டு போர்பந்தர் மற்றும் சூரத் ஆகியவை படையில் இணையும்.

அதே போல Project 17Bயின் கீழ் கட்டப்பட்டு வரும் ஏழு நீலகிரி ரக ஃப்ரிகேட் கப்பல்களில் வரும் மூன்றாவதான INS UDAYGIRI ஐ.என்.எஸ் உதய்கிரி நாளை கடலில் இறக்கப்பட உள்ளது, ஏற்கனவே 2019 மற்றும் 2020ஆம் ஆண்டில் INS NILGIRI நீலகிரி மற்றும் INS HIMGIRI ஹிம்கிரி ஆகியவை கடலில் இறக்கப்பட்டன.

இவற்றில் INS NILGIRI வருகிற ஆகஸ்டு மாதம் இந்திய கடற்படையில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது, மேற்குறிப்பிட்ட ஏழு கப்பல்களில் நான்கு மும்பையிலும் மூன்று கொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் கப்பல் கட்டுமான தளத்திலும் கட்டப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்திய கடற்படையில் 130 போர் கப்பல்கள் மற்றும் 230 வானூர்திகளும் உள்ள நிலையில் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, அதன் ஒரு பகுதியாக சுமார் 41 கப்பல்கள் (இந்தியாவில் 39, ரஷ்யாவில் 2) கட்டுமான நிலையில் உள்ளன என்பது கூடுதல் தகவல் ஆகும்.