5 லட்சம் தலைக்கு விலை வைக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் சரண்டர் !!

  • Tamil Defense
  • May 3, 2022
  • Comments Off on 5 லட்சம் தலைக்கு விலை வைக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் சரண்டர் !!

ஒடிசா மாநிலம் காலஹன்டி மாவட்டத்தில் தலைக்கு சுமார் 5 லட்சம் ரூபாய் விலை வைக்கப்பட்டு இருந்த 50 வயதான மாவோயிஸ்ட் லல்சு அல்லது செந்து எனப்படும் லஷ்மண் அப்கா சரணடைந்துள்ளான்.

இவன் சட்டீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கங்க்லோர் காவல் நிலைய எல்கைகக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவன் ஆவான், கடந்த 2009ஆம் ஆண்டு கங்க்லோரில் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்த இவன் பின்னர் 2011ஆம் ஆண்டு முதல் ஒடிசா மாநிலத்தில் இருந்து இயங்க தொடங்கினான்.

அப்போது இருந்து கலாஹந்தி மாவட்டத்தில் உள்ள பம்சாதரா-கும்சுக்-நகாபலி ஆகிய பகுதிகள் அடங்கிய டிவிஷனில் இயங்கி வந்தான், பின்னர் மாவோயிஸ்ட் இயக்கத்தின் பகுதி செயலாளர் ஆகவும் இயங்கி வந்த இவன் காவல்துறை DIG ராஜேஷ் பண்டிட், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சவர்ணா விவேக் மற்றும் CRPF கமாண்டன்ட் பிப்லப் சர்கார் ஆகியோர் முன்னிலையில் சரணடைந்தான்.

மாவோயிஸ்ட் கொள்கைளை நாளடைவில் வெறுக்க துவங்கியதும், சரணடையும் நக்சல்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு வாழ்வாதாரம் ஏற்படுத்தி கொடுக்கப்படுவது, மாவோயிஸ்ட் காதலர்களுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற நடவடிக்கைகளால் மனம் மாறி தற்போது சரணடைந்து உள்ளதாகவும் லஷ்மண் ஆப்காவுக்கும் வாழ்வாதாரம் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.