தாலிபான்கள் இடையே அதிகரிக்கும் மோதல் !!

அமெரிக்கா படைகளை விலக்கியதும் ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் கோலோச்ச துவங்கினர் படிப்படியாக தாலிபான் படைகள் ஒட்டுமொத்த ஆஃப்கனையும் கைபற்றினர்.

ஆஃப்கானிஸ்தானை கைபற்றும் போதும், ஆட்சியை கைபற்றிய துவக்கத்திலும் தாலிபான்கள் அரசியல் ரீதியாக ராணுவ ரீதியாக இயங்கும் வலிமை மிக்க அமைப்பாக இருந்தனர் தற்போது ஆஃப்கானிஸ்தானுடைய வளங்கள் மீதும் தலைநகர் காபூல் மீதும் அளவில்லா கட்டுபாட்டை கொண்டுள்ளனர்.

தற்போது இத்தகைய ஒற்றுமை மிக்க தாலிபான்கள் இடையே பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன குறிப்பாக அவர்களின் இரண்டு முக்கிய கோஷ்டிகளான ஹக்கானி மற்றும் யாகூப் கோஷ்டிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிராஜூதீன் ஹக்கானி ஆஃப்கானிஸ்தானுடைய உள்துறை அமைச்சராக உள்ளார், இவன் மிகவும் ஆபத்தான ஹக்கானி குழுவின் தலைவன் என்பதும் இந்த குழுவை சேர்ந்த 6000 வீரர்கள் தலைநகர் காபூலை அவனது சகோதரன் அனாஸ் ஹக்கானி தலைமையில் கட்டுபடுத்தி வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே போல் பாதுகாப்பு அமைச்சரான மூல்லா யாகூப் தாலிபான் நிறுவனர் மூல்லா ஒமார் உடைய மகனாவான், தனது தந்தையின் இறப்புக்கு பிறகு தாலிபான்கள் அமைப்பில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட அதிகமாக தீவிரம் காட்டி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுதவிர பாகிஸ்தானுடைய தலையீடு சில தாலிபான் தலைவர்களுக்கு குறிப்பாக மூல்லா யாகூப் போன்றவர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை தாலிபான் அரசை பாகிஸ்தான் முழுவதும் கட்டுபடுத்த விரும்புவதாக எண்ணுகின்றனர்.

ஹக்கானி குழுவினர் பல உலக நாடுகளில் உள்ள பயங்கரவாதிகளுக்கு தங்களது ஆதரவு பயிற்சி ஆயுதங்களை அளித்து வருகின்றனர், அது மூல்லா யாகூப் குழுவினருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை இதனால் சர்வதேச சமுகம் ஆஃப்கானிஸ்தானை தனிமைப்படுத்தி விடும் என அச்சப்படுகின்றனர்.

ஹக்கானி குழுவினர் மதரீதியாக அதிக தீவிரமான சுன்னி பிரிவை சேர்ந்தவர்கள் இவர்கள் தாலிபான்கள் அமைப்பையே மொத்தமாக சுன்னி பிரிவிற்கு மாற்ற முயன்றனர் ஆனால் தியோபந்த் பிரிவை சேர்ந்த பிற தாலிபான்கள் அதனை எதிர்த்து வருகின்றனர்.

பழங்குடிகள் மற்றும் பஷ்தூன் குழுக்கள் இடையேயான மோதல்களும் ஒரு காரணமாக பாரக்கப்படுகிறது அதே நேரத்தில் காந்தஹாரில் இருந்து அதிகார மையம் காபூலுக்கு மாற்றப்பட்டதும் மற்றொரு காரணமாக பாரக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.