நேட்டோ Cyber Defenseல் இணைந்த நேட்டோ உறுப்பினர் அல்லாத முதலாவது ஆசிய நாடு !!

  • Tamil Defense
  • May 7, 2022
  • Comments Off on நேட்டோ Cyber Defenseல் இணைந்த நேட்டோ உறுப்பினர் அல்லாத முதலாவது ஆசிய நாடு !!

நேட்டோவின் Cooperative Cyber Defense Center of Excellence – CCDCOEல் தென்கொரியா இணைந்துள்ளதாக பிரபலமான தென்கொரிய ஊடகமான யோன்ஹாப் செய்தி வெளியிட்டு உள்ளது.

இதன்மூலம் மேற்கண்ட அமைப்பில் இணைந்த முதலாவது ஆசிய நாடு எனவும் 5ஆவது நேட்டோ உறுப்பினர் அல்லாத நாடு என்ற பெருமைகளையும் தென்கொரியா பெற்றுள்ளது.

தென்கொரியாவின் உளவு அமைப்பான NIS – National Intelligence Service அதாவது தேசிய உளவு சேவை அமைப்பானது இதன்மூலம் தனது சைபர் பாதுகாப்பு திறன்களை பன்மடங்கு அதிகரித்து கொள்ளவும் அதற்கு மேற்குறிப்பிட்ட மையத்திற்கு அதிக பணியாளர்களை அனுப்பி வைக்கவும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது CCDCOE அமைப்பில் 27 நேட்டோ உறுப்பு நாடுகள் உட்பட 32 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன இவை தவிர ஜப்பான் மற்றும் அயர்லாந்து ஆகியவை நிதி அளிக்கும் நாடுகளாக உள்ளன என்பது கூடுதல் தகவல் ஆகும்.