இந்தியாவில் நடைபெற உள்ள SCO பயங்கரவாத எதிர்ப்பு கூட்டத்தில் பங்கு பெறும் பாகிஸ்தான் !!

  • Tamil Defense
  • May 13, 2022
  • Comments Off on இந்தியாவில் நடைபெற உள்ள SCO பயங்கரவாத எதிர்ப்பு கூட்டத்தில் பங்கு பெறும் பாகிஸ்தான் !!

கடந்த 2001 ஆம் ஆண்டு சீனாவின் யோசனைப்படி உதயமான அமைப்பு தான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு அதாவது Shanghai Cooperation Organization இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் 2017ஆம் ஆண்டு இணைந்தன.

இந்த ஆண்டுக்கான SCO பயங்கரவாத எதிர்ப்பு ஆலோசனை கூட்டம் இந்தியாவில் வருகிற 16 முதல் 19ஆம் தேதி வரையில் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டமானது SCO அமைப்பின் RATS – Regional Anti Terrorism Structure அதாவது பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் மேற்பார்வையில் தான் வழக்கமாக நடைபெறும் என கூறப்படுகிறது.

இந்த சந்திப்பில் சீனா ரஷ்யா உஸ்பெகிஸ்தான் தஜிகிஸ்தான் கஜகஸ்தான் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளை தவிர பாகிஸ்தானும் கலந்து கொள்கிறது இதற்காக மூன்று பாகிஸ்தானிய பிரதிநிதிகள் இந்தியா வர உள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற SCO அமைப்பின் பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு பயிற்சியில் இந்தியாவும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மேலும் இந்தியா இந்த ஆண்டு அக்டோபர் 14 அன்று SCO RATS அமைப்பின் சந்திப்பை நடத்த உள்ளது தவிர மானேசரில் உள்ள NSG தலைமையகத்தில் SCO பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு பயிற்சியை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது.