1 min read
இரண்டு முன்னனி போர் கப்பல்களுக்கான இரும்பை சப்ளை செய்த இந்திய நிறுவனங்கள் !!
சமீபத்தில் இந்திய கடற்படையின் Project 15 Bravo திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் விசாகப்பட்டினம் ரகத்தின் கடைசி நாசகாரி கப்பலான சூரத் மற்றும்
மற்றும் project 17 Alpha நீலகிரி ரகத்தின் முன்றாவது ஸ்டெல்த் ஃப்ரிகேட் கப்பலான INS UDAYGIRI உதயகிரி ஆகியவை மும்பை மஸகான் கப்பல் கட்டுமான தளத்தில் நடைபெற்ற விழாவில் கடலில் இறக்கப்பட்டன.
இந்த இரண்டு கப்பல்களை கட்ட தேவையான இரும்பை மத்திய அரசு நிறுவனமான SAIL – STEEL AUTHORITY OF INDIA நிறுவனம் தனது பிலாய், பொகாரோ மற்றும் ரூர்கேலா தொழிற்சாலைகளில் இருந்து சப்ளை செய்துள்ளது.
இதுவரை இரண்டு கப்பல்களையும் கட்டமைக்க தேவையான சுமார் 4 ஆயிரத்து 300 டன்கள் அளவிலான இரும்பை SAIL நிறுவனம் மும்பை மஸகான் கப்பல் கட்டுமான தளத்திற்கு சப்ளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.