
மேற்கு வங்க மாநிலத்தின் பஸிர்ஹாட் பகுதியில் இந்தியா வங்கதேசம் இடையே கோஜதங்கா பகுதியில் சர்வதேச எல்லை பகிரப்படுகிறது இங்கு BSF வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்படி கடந்த 11 ஆம் தேதி எல்லை பாதுகாப்பு படையின் BSF 153ஆவது பட்டாலியனை சேரந்த பெண் வீராங்கனை இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது இருட்டில் அவரை சில மர்ம நபர்கள் கடுமையாக தாக்கி அவரது INSAS துப்பாக்கி மற்றும் 20 தோட்டாக்களை திருடி தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர் அதே நேரத்தில் சந்தேகத்திற்கு உரிய சில நபர்களையும் கைது செய்துள்ளனர்.