நாகலாந்து என்கவுண்டர் சம்பவம் விசாரணை நிறைவு விரைவில் நடவடிக்கை !!
1 min read

நாகலாந்து என்கவுண்டர் சம்பவம் விசாரணை நிறைவு விரைவில் நடவடிக்கை !!

இந்திய தரைப்படையின் தலைமை தளபதி ஜெனரல் பாண்டே கடந்த டிசம்பர் 4 அன்று நாகலாந்தில் நடைபெற்ற என்கவுண்டர் சம்பவம் பற்றிய விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.

நாகலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தில் பணிக்கு சென்று திரும்பிய பணியாளர்கள் மீது பயங்கரவாதிகள் என கிடைத்த தகவல் காரணமாக தாக்குதல் நடத்தபட்டது இதில் பலர் உயிரிழந்தனர் ஒரு ராணுவ வீரரும் கொல்லப்பட்டார்.

இதை தொடர்ந்து இந்திய தரைப்படை உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் அந்த விசாரணை முடிவுக்கு வந்துள்ளது தற்போது விசாரணை அறிக்கை சட்டரீதியான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தரைப்படை தளபதி ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் தவறு இழைத்து இருந்தால் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ராணுவ நடவடிக்கை முறைமைகள் சீர்திருத்தம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.