1 min read
இந்தியாவில் ரயில்வே தண்டவாளங்களை தகர்க்க பாக் சதி உளவுத்துறை எச்சரிக்கை !!
இந்திய உளவு அமைப்புகள் பாகிஸ்தானுடைய உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ரயில்வே பாதைகளை அதுவும் சரக்கு ரயில்கள் அதிகம் பயணிக்கும் பாதைகளை தகர்க்க சதி திட்டம் தீட்டி உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானுடைய ஸ்லீப்பர் செல்களுக்கு அதிகளவில் பணம் பரிமாறப்பட்டு வருவதாகவும் அவர்களை கொண்டு பஞ்சாப் மற்றும் அதையொட்டிய பிற மாநிலங்களில் தாக்குதல்களை நடத்த ஐ.எஸ்.ஐ திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் பஞ்சாப் மற்றும் பல்வேறு மாநில அரசுகளை தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்துள்ளது பாதுகாப்பு அமைப்புகள் அனைத்துமே உஷார்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.