காஷ்மீர் மற்றும் பஞ்சாபை குறிவைத்து புதிய பயங்கரவாத இயக்கங்களை உருவாக்கும் பாக் !!

  • Tamil Defense
  • May 11, 2022
  • Comments Off on காஷ்மீர் மற்றும் பஞ்சாபை குறிவைத்து புதிய பயங்கரவாத இயக்கங்களை உருவாக்கும் பாக் !!

பாகிஸ்தானுடைய.உளவு அமைப்பான ISI லஷ்கர் இ கால்சா என்ற பெயரில் புதிய பயங்கரவாத இயக்கம் ஒன்றை தோற்றுவிக்க உள்ளதாகவும் இதனை தொடர்ந்து இந்திய பாதுகாப்பு அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன.

இந்தியாவின் உள்நாட்டு உளவு பிரிவான IB தனது சக அமைப்புகள் உஷாராக இருக்கவும் விசாரணைகளை துவங்கவும் அறிவுறுத்தி உள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

லஷ்கர் இ கால்சா அமைப்பு சமுக வலைதளங்களில் மிகவும் தீவிரமாக இயங்கி ஆஃப்கானியர்கள் சேர்த்து காஷ்மீரில் ஊடுருவ வைத்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்தவும்

அமர் காலிஸ்தானி எனும் புனைபெயரில் இயங்கும் மற்றொரு பாகிஸ்தான் உளவாளி காலிஸ்தான் ஆதரவு மனநிலை கொண்டோரை ஈர்த்து அவர்கள் மூலமாக பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

அமர் காலிஸ்தானி என்ற புனைபெயரில் இயங்கும் மேற்குறிப்பிட்ட நபர் ஆசாத் காஷ்மீர் மற்றும் ஆசாத் காலிஸ்தான் என்ற பல பெயர்களில் பல்வேறு முகநூல் பக்கங்களை இயக்கி வருவதாகவும்

பஞ்சாப் (காலிஸ்தான்) மற்றும் காஷ்மீரின் சூழல்களை பயன்படுத்தி கொண்டு தற்போது ISI தன்னுடைய K2 பிரிவை மீண்டும் செயல்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது இதன்மூலம் இரண்டு பிரிவினைவாத இயக்கங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து இயக்க உள்ளது என்றால் மிகையல்ல.