வடகொரியா தொடர்ச்சியாக மூன்று குறுந்தூர பலில்டிக் ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி சோதனை செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரிய ராணுவத்தின் கூட்டு படைகள் தலைமை தளபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் வடகொரிய தலைநகர் பிராந்தியத்தில் இருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும்,
தென்கொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியை தாண்டிய கடல் பகுதிகளில் மூன்று ஏவுகணைகளும் விழுந்ததாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது, இதனையடுத்து தென்கொரியா அமெரிக்கா ஜப்பான் ஆகிய நாடுகள் கண்காணிப்பை வலுப்படுத்தி உள்ளன.
ஜப்பானிய பிரதமர் ஃப்யூமியோ கிஷிடா ஏவுகணை சோதனைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளவும் ஏவுகணைகள் பயணித்த பகுதிகளில் உள்ள வானூர்திகள் மற்றும் கடல்சார் கலன்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
ஜப்பானிய கடலோர காவல்படை வடகொரியா ஏவிய ஒரு ஏவுகணை ஜப்பானிய கடல்பகுதியில் விழுந்துள்ளதாக கருதுவதாகவும் ஜப்பானிய கடல்சார் கலன்கள் கவனமாக இருக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளது.