லா ரீயூனியன்: ஃபிரெஞ்சு கடற்படையுடன் இணைந்து கண்காணிக்கும் இந்திய கடற்படை !!

  • Tamil Defense
  • May 16, 2022
  • Comments Off on லா ரீயூனியன்: ஃபிரெஞ்சு கடற்படையுடன் இணைந்து கண்காணிக்கும் இந்திய கடற்படை !!

இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தீவு தான் ரீயூனியன் ஆகும் இது ஃபிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமானது மடகாஸ்கர் நாட்டிற்கு கிழக்கே 680 கிலோமீட்டர் தொலைவிலும் மொரிஷியஸ் நாட்டிற்கு தென்மேற்கே 180 கிலோமீட்டர் தொலைவிலும் இது அமைந்துள்ளது.

கடந்த வாரம் மேற்குறிப்பிட்ட தீவில் இருந்து இந்திய கடற்படையும் ஃபிரெஞ்சு கடற்படையும் இணைந்து மேற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் கூட்டாக கண்காணிப்பில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது இந்திய கடற்படையின் P8 கடல்சார் தொலைதூர கண்காணிப்பு – கப்பல் மற்றும் நீர்மூழ்கி வேட்டை விமானங்கள் ஃபிரெஞ்சு கடற்படையின் போர் கப்பல்களுடன் இணைந்து சுமார் ஐந்து நாட்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்திய கடற்படையின் P8 விமானங்கள் வானிலிருந்து கண்காணித்து தகவல்களை உடனுக்குடன் கீழே கடலில் இருக்கும் ஃபிரெஞ்சு கப்பல்களுடன் பகிரந்து கொண்டு மொசாம்பிக் ஜலசந்தி உள்ளடக்கிய தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டதாக இந்திய கடற்படை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இப்படி ரீயூனியன் தீவில் இந்திய கடற்படையின் P8 விமானங்கள் அனுப்பி வைக்கப்படுவது இது முதல்முறையல்ல ஏற்கனவே 2020ஆம் ஆண்டு இதே போல கூட்டு ரோந்து பணிகளுக்காக P8 விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன அப்போது ஃபிரஞ்சு கடற்படையினரும் இந்திய விமானத்தில் இருந்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஆஃப்ரிக்க நாட்டின் மேற்கு கடற்கரையோரம், அதையொட்டிய தீவுகள், மொசாம்பிக் ஜலசந்தி, சீனா அதிகமாக மூதலீடு செய்து வரும் ஆஃப்ரிக்காவின் கிழக்கு கடற்கரையோரம் ஆகிய பகுதிகள் உள்ளடங்கியுள்ளது கூடுதல் தகவல் ஆகும்.